• vilasalnews@gmail.com

அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் திடீர் ஆலோசனை!

  • Share on

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில், பாமகவுக்கு 23 தொகுதிகளும் பாஜகவுக்கு 20 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

தேமுதிக, த.மா.கா ஆகிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. தேமுதிக முதலில் 25 தொகுதிகள் கேட்டது. அதை அதிமுக ஏற்காததால், 20 தொகுதிகளாக குறைத்துக் கொண்டது. அதையும் ஏற்காத அதிமுக, 15 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன்வந்திருக்கிறது.

10 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று முடிவுக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், இன்றும் அதற்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை. இதே நிலை தான் த.மா.காவுக்கும். 

இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து அதிகபட்சம் 20 தொகுதிகளை கொடுக்க அதிமுக முன்வந்திருக்கிறதாம். அண்மையில் கூட்டணியில் இருந்த பாஜகவை விட குறைவான தொகுதிகளை அதிமுக கொடுப்பதால், தேமுதிக அதை ஏற்க மறுக்கிறது.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்வது, தேர்தல் அறிக்கை வெளியீடு குறித்தும் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு இழுபறி குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.

  • Share on

"வான்டடாக வந்த" கருணாஸ்!

அதிமுக கூட்டணிக்கு வெற்றி மகுடமா?.. என்ன சொல்கிறார் பிரபல ஜோதிடர்!

  • Share on