• vilasalnews@gmail.com

"வான்டடாக வந்த" கருணாஸ்!

  • Share on

கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் வழங்கியுள்ளது.

முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் அஜய் வாண்டையார், இன்று, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியிடம் ஆதரவு கடிதம் வழங்கினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவாலயத்தில் இல்லை. எனவே பாரதியிடம் கருணாஸ் கட்சி பிரமுகர் இந்த கடிதம் அளித்துள்ளார்.

எனவே முக்குலத்தோர் புலிப்படை கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்சிக்கு, 1 தொகுதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதில் கருணாஸ்தான் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது.

அதிமுக கூட்டணியில் இருந்த தமிமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயக கட்சி அங்கிருந்து திமுக கூட்டணி பக்கம் வந்துள்ளது. அதுவும் திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கொங்கு மண்டலத்தில் செல்வாக்குள்ள, ஆதி தமிழர் பேரவை கட்சியை சேர்ந்த அதியமான் இன்று, அண்ணா அறிவாலயம் வந்துள்ளார். அவரும் திமுக தலைமையுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது.

ஆனால், இனி எந்த கட்சியாக இருந்தாலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வாய்ப்பு தரப்படும் என்று தெரிகிறது. எனவே 180 தொகுதிகளுக்கு மேல் திமுக போட்டியிடப் போவது உறுதியாகி விட்டது.

  • Share on

திமுக கெடுபிடி : 6 தொகுதிக்கு ஓகே சொன்ன மார்க்சிஸ்ட் கட்சி!

அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் திடீர் ஆலோசனை!

  • Share on