• vilasalnews@gmail.com

திமுக கெடுபிடி : 6 தொகுதிக்கு ஓகே சொன்ன மார்க்சிஸ்ட் கட்சி!

  • Share on

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, தொகுதி பங்கீடு பணியில் பிஸியாக இருக்கிறது. கடந்த முறை தேர்தல்களிலெல்லாம் கூட்டணி கட்சிகள் கேட்ட தொகுதிகளை வழங்கியது. ஆனால், இந்த முறை தேர்தலில் வெற்றி வாகையை சூட திட்டமிட்டிருக்கும் திமுக தொகுதி பங்கீட்டில் கறார் காட்டிக் கொண்டிருக்கிறது.

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்ட விசிக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் 6 தொகுதிகள் தான் வழங்கப்பட்டிருக்கின்றன. கடந்த முறை தேர்தலின் போது 40க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெற்ற காங்கிரசுக்கே 25 தொகுதிகள் மட்டுமே திமுக கொடுத்திருக்கிறது.

இதனால், திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகளுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வழங்கப்படாது என்பது அப்பட்டமாக தெரிய வந்துவிட்டது. இருந்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தது. அதற்கு இணங்காத திமுக, கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொள்ளுங்கள், இல்லையென்றால் கூட்டணியை விட்டு விலகுங்கள் என்ற தொனிலேயே நடந்து கொண்டது.

இந்த நிலையில், திமுக கொடுக்க முன்வந்த 6 தொகுதிகளுக்கு ஓகே சொன்ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணனும் கையெழுத்திட்டனர்.

விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கும் திமுக 6 தொகுதி தான் கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on

அதிமுகவில் யாருக்கு சீட்..?

"வான்டடாக வந்த" கருணாஸ்!

  • Share on