• vilasalnews@gmail.com

அதிமுகவில் யாருக்கு சீட்..?

  • Share on

கூட்டணி கட்சிகளுடன் சீட் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், மறுபுறம் தங்கள் கட்சிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் தீவிரமாக உள்ளது அதிமுக.

போட்டியிட 8 ஆயிரத்து 240 பேர் விருப்ப மனு அளித்தனர். இந்த மனுக்கள் தொகுதிவாரியாக பிரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளரிடம் தங்களது மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு தகுதியுள்ள 3 பேரை தேர்வு செய்து தருமாறு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டனர்.

இதன் அடிப்படையில் பெறப்பட்ட பட்டியலில் இருந்து தொகுதிக்கு ஒருவரை தேர்வு செய்யும் பணியில் முதல்வர் துணை முதல்வர் மற்றும் மூத்த நிர்வாகிகள் நேற்று 2-வது நாளாக தலைமை கழகத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட ஆறு வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்ட நிலையில், வரும் 9-ஆம் தேதி இரண்டாவது பட்டியலை அதிமுக தலைமை வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் வரும் பத்தாம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. அதற்குப்பிறகு அதிமுகவின் முழு வேட்பாளர் பட்டியலை அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

வரும் 15ஆம் தேதி முதல் ஆளுக்கொரு திசையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை முதல்வரும் துணை முதல்வரும் துவங்கவும் திட்டமிட்டு வேலைகளை நடத்தி வருகின்றனர். வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தி இல்லாத வகையில் வெளியிட வேலைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on

எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்களே? காங்கிரஸ் பரிதாபம்!

திமுக கெடுபிடி : 6 தொகுதிக்கு ஓகே சொன்ன மார்க்சிஸ்ட் கட்சி!

  • Share on