• vilasalnews@gmail.com

எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்களே? காங்கிரஸ் பரிதாபம்!

  • Share on

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 2004 முதல் பயணம் செய்து வருகிறது. 2006 ல் காங்கிரசுக்கு 48 தொகுதிகளும், 2011ல் 63 தொகுதிகளும், 2016 ல் 41 தொகுதிகளும் திமுக ஒதுக்கியது. இந்த முறையும் எப்படியாவது 41 தொகுதிகளை பெற்று விட வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டது.

கடந்த மாதம் 25ஆம் தேதி நடந்த திமுக காங்கிரஸ் இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது காங்கிரசுக்கு 15 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்று திமுக அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

நாடு முழுவதும் அசுரபலம் கொண்ட பாஜக வே அதிமுக ஒதுக்கிய 20 தொகுதிகளுடன் நடையைக் கட்டி விட்டது. காங்கிரஸ் நீண்டகால நண்பர் என்ற முறையில் அதிமுகவில் பாஜக பாமகவுக்கு ஒதுக்கிய தொகுதிகளை விட கூடுதலாக அதாவது 25 தொகுதிகளை ஒதுக்க முன் வந்துள்ளோம்.

மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் உங்களுக்குத்தான் இந்த டீலுக்கு ஓகே னா இப்போது அல்லது நாளையோ ஒப்பந்தம் செய்யலாம் என ஸ்டாலின் கறார் காட்டினாராம்.

இதற்கு மேல் வேறு வழி இல்லை என்று தெரிந்து கொண்ட காங்கிரஸ், திமுக டீலுக்கு சம்மதம் தெரிவித்து, நேற்று காலை அறிவாலயம் வந்த காங்கிரஸ் தலைவர் அழகிரி, பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

25 தொகுதிகளில் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. அதற்கு பார்க்கலாம் என்று ஸ்டாலினிடம் இருந்து பதில் வந்துள்ளது.

மேலும் ராஜ்யசபா ஒன்று என்று கேட்டபோது அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்து வெற்றி பெற்ற பிறகு பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறி காங்கிரசை வழியனுப்பி வைத்தார் ஸ்டாலின்.

எப்படி இருந்த நீங்க இப்படி ஆக்கிட்டீங்களே என்று காங்கிரஸின் பரிதாப நிலை கண்டு, பலரும் முணுமுணுப்பது இப்போது கேட்க முடிகிறது.

  • Share on

‘’முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்’’

அதிமுகவில் யாருக்கு சீட்..?

  • Share on