• vilasalnews@gmail.com

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்

  • Share on

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மத்திய, மாநில அரசுகள் கொரோனவை சிறப்பாக கையாண்டு வருகிறது என்றும், 144 தடை உள்ளபோது அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என்றும் கே.பி இராமலிங்கம் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், எம்.பி. கே.பி.ராமலிங்கம் திமுக கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்நிலையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பியும் , அழகிரின் தீவிர ஆரதவாளருமான,  கே.பி.ராமலிங்கம் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கே.பி.ராமலிங் கத்துக்கு அடிப்படை உறுப்பினர் அட்டையை பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்:

“கே.பி.ராமலிங்கத்தின் வருகையால் கூடுதல் பலம் என்றும், கே.பி.ராமலிங்கத்தின் வருகை பாஜகவுக்கு மேலும் உத்வேகம் அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

  • Share on

பாஜக மாவட்ட தலைவர் மீது மகளிரணி நிர்வாகி பாலியல் புகார்

அரசு பள்ளி மாணவர்களுக்கான தனியார் மருத்துவ கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் - மு.க.ஸ்டாலின்

  • Share on