• vilasalnews@gmail.com

“அதிமுக-பாஜக கூட்டணி இத்துப்போன காய்லாங்கடை இஞ்சின்”- கிண்டலடித்த கே.பாலகிருஷ்ணன்

  • Share on

தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அனல் பறக்கிறது. இரண்டு கூட்டணிகளிலும் கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகளைப் பெறுவதில் மும்முரம் காட்டிவருகின்றனர். அந்த வகையில் திமுகவுடன் இந்திய கம்யுனிஸ்ட் நேற்று ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி ஆறு தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியுடனான பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியாகவே சென்றுகொண்டிருக்கிறது.

அக்கட்சித் தரப்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்பதாகவும், அதற்கு திமுக இந்திய கம்யுனிஸ்ட்டுக்கு கொடுத்த ஆறு தொகுதியில் நிற்பதாகவும் கூறப்பட்டது. இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வந்தனர்.

பேச்சுவார்த்தை முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நகர்கிறது. நாங்கள் ஒரு எண்ணிக்கை கேட்டோம். அவர்கள் ஒரு எண்ணிக்கை சொன்னார்கள்.

எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. செயற்குழுவைக் கூட்டி இறுதிமுடிவு எடுக்கப்படும்” என்றார். அப்போது அவரிடம் அதிமுக-பாஜக கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அது காய்லாங்கடைல போடுற பழைய இஞ்சின். அதெல்லாம் ஓடாது. அக்கு வேறா ஆணி வேறா கழண்டு கிடக்குற கூட்டணி” என பட்டென்று போட்டு உடைத்துவிட்டார்.

  • Share on

“வாக்கு வித்தியாசத்துல சாதனை படைக்கனும்” – துரைமுருகனின் ‘நக்கல்’ கேள்வியும் உதயநிதியின் ‘வெட்க’ பதிலும்

முடிவுக்கு வருகிறதா இழுபறி? தேமுதிகவுக்கு 15 சீட்+ ஒரு ராஜ்யசபா சீட்?

  • Share on