• vilasalnews@gmail.com

“வாக்கு வித்தியாசத்துல சாதனை படைக்கனும்” – துரைமுருகனின் ‘நக்கல்’ கேள்வியும் உதயநிதியின் ‘வெட்க’ பதிலும்

  • Share on

திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறம் இருந்தாலும், வெற்றி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நேர்காணல் மறுபுறம் அனல் பறந்தது. நேர்காணல் குழுவில் தலைவர் மு.க ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் துருவித் துருவி நேர்காணல் நடைபெற்றிருக்கிறது. எடப்பாடி தொகுதியில் மட்டும் 25க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த நேர்காணலில் யாரும் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறார்களா என்ற மறைமுக கேள்விகளும் இடம்பெற்றிருந்ததாம்.

மார்ச் 2ஆம் தேதி தொடங்கிய இந்த நேர்காணல் கடைசி நாளாக இன்று நடைபெற்றது. இன்று கடைசி நாள் என்பதால் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் உதயநிதியுடனான நேர்காணல் கலகலப்பாக நடைபெற்றிருக்கிறது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட அவர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். துரைமுருகன் எப்போதுமே கலகலவென பேசும் குணாதிசயம் கொண்டவர் என்பதால் கிண்டலாகவே உதயநிதியிடம் பேசியிருக்கிறார்.

சீட் கொடுத்தா ஜெயிச்சிருவீங்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு உதயநிதி, உறவினர்கள் குழந்தைகளிடம் படிப்பு குறித்து கேள்வி கேட்டால் நெளிந்துகொண்டே ஒருவித குறுவெட்கத்துடன் பதில் சொல்வது போல நிச்சயம் ஜெயிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அதேபோல தொகுதியில உங்களுக்கு செல்வாக்கு எப்படி இருக்கு என்று கேட்டிருக்கிறார். இதுமட்டுமில்லாமல் தேர்தலில் எவ்வளவு செலவு செய்வீர்கள் என்றும் கேட்டிருக்கிறார்.

இறுதியில் நிற்கும் தொகுதியில் எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினராம். சில நாட்களுக்கு முன் துரைமுருகன், உதயநிதி அமைச்சரவையிலும் நான் இருப்பேன் என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

  • Share on

குமரியில் பொன்னார் போட்டி

“அதிமுக-பாஜக கூட்டணி இத்துப்போன காய்லாங்கடை இஞ்சின்”- கிண்டலடித்த கே.பாலகிருஷ்ணன்

  • Share on