• vilasalnews@gmail.com

குமரியில் பொன்னார் போட்டி

  • Share on

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் அனைத்தும் அதிரடியாக களமிறங்கியுள்ளன. விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வரும் அதே வேளையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யும் பணியில் திமுக, அதிமுக ஈடுபட்டுள்ளது.

அதிமுக தன்னுடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியது. அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. ஆனால் எந்தெந்த தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது என்பது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதோடு, பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

என் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்திருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அன்றே நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தேர்தலில், பொன்னாரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி களமிறங்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share on

திமுக நேர்காணலில்'ஸ்டாலின் கேட்ட ஒரு கேள்வி'!

“வாக்கு வித்தியாசத்துல சாதனை படைக்கனும்” – துரைமுருகனின் ‘நக்கல்’ கேள்வியும் உதயநிதியின் ‘வெட்க’ பதிலும்

  • Share on