தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான பணிகளையும் தீவிரமாக செய்துக் கொண்டிருக்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கையில், தொடர்ந்து 3 ஆவது நாளாக விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலையில் நேர்காணல் நடைபெறுகிறது. இன்று நேர்காணலுக்கான கடைசி நாள் என்பதால், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலினிடம் திமுகவினர் நேர்காணல் நடத்தினர். அதே போல, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினிடம் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
இந்த நிலையில், திமுக நேர்காணலின் போது ஸ்டாலின் கேட்ட ஒரு கேள்வி திமுக நிர்வாகிகளை அசர வைத்ததாக செய்திகள் வெளியாகின்றன.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட புதுச்சேரியை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் விருப்ப மனு அளித்திருக்கிறார். அவரிடம் நேர்காணல் நடத்திய ஸ்டாலின், காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியுமா? என கேள்வி எழுப்பினாராம். இதை அறிந்த நிர்வாகிகள், திமுக தலைமையில் புதுச்சேரியில் 18க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி விட்டுச் சென்றார்களாம்.