• vilasalnews@gmail.com

ஒட்டுமொத்த குடும்பமே குழப்பத்தில் ...என்ன நடக்கிறது தேமுதிகவில்?

  • Share on

தேமுதிகவுக்குள் என்ன நடக்கிறது என நமக்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கே தெரியாது என்கின்றனர் நெருங்கிய வட்டாரங்கள். 

அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறதா இல்லையா? வேறு அணியில் இணைகிறதா? எந்தக் கேள்விகளுக்கும் பதில் இல்லாமலேயே தேமுதிகவின் அரசியல் நகர்வு இருக்கிறது.

இரு நாட்களுக்கு முன் துணைச் செயலாளர் எல்கே சுதீஷ் பேசுகையில், அதிமுக கூட்டணிக்காகக் கெஞ்சுகிறது என்கிறார். அப்போது ஏன் இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதற்கும் பதில் இல்லை.

இச்சூழலில் இன்று வெளியான பாமக தேர்தல் அறிக்கையில் கூட்டணிக் கட்சிகளின் சின்னமான தாமரை, இரட்டை இலை மட்டுமே உள்ளது. தேமுதிக சின்னம் இடம்பெறவில்லை. இதன்மூலம் அதிமுக தேமுதிகவை கழற்றிவிட்டது என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதற்கு மத்தியில் தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 25ஆம் தேதி தொடங்கியது. பிரேமலதாவும் மூத்த மகன் விஜய பிரபாகரனும் விருப்ப மனு அளித்தார்கள். ஆனால் இருவருமே எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்ற தகவலைக் குறிப்பிடவில்லை.


விருப்ப மனு கொடுப்பதற்கு இன்றே கடைசி என்று அறிவித்திருந்த நிலையில் எல்கே சுதீஷ் இன்று விருப்ப மனு அளித்தார். அவரும் விருப்ப மனுவில் எந்தத் தொகுதியில் போட்டியிட விருப்பம் என குறிப்பிடவில்லை. 

இந்தப் பக்கம் தாவுவதா அந்தப் பக்கம் தாவுவதா என்று தெரியாமல் ஒட்டுமொத்த குடும்பமே குழம்பி போய் நிற்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க விஜயகாந்த் பழைய பன்னீர்செல்வமாக வர வேண்டும். ஆனால் அப்படியொரு நிகழ்வு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை என்பதே சோகம்!


  • Share on

திக்திக் தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர் போட்டியாளர்கள்!

அதிமுகவுடன் தொகுதி இழுபறி...தமிழகத்திற்கு கிளம்பிவரும் அமித்ஷா

  • Share on