• vilasalnews@gmail.com

அதிமுக வரலாற்றில் முதன் முறையாக ஒரே நாளில் நேர்காணல் நடைபெற்றது

  • Share on

அதிமுகவில் விருப்ப மனு செய்த அனைவருக்கும் ஒரே நாளில் நேர்காணல் நடைபெற்றது. அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலில் பணியாற்றிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பம் தெரிவித்து அதிமுகவில் உள்ள 8250 பேர் மனுக்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. மனு கொடுத்த அனைவரையும் ஒரே நாளில் நேர்காணல் நடத்தி வேட்பாளரரை தேர்வு செய்ய அதிமுக தலைமை நடவடிக்கை  எடுத்துள்ளது.

இதற்காக சென்னை ராயபேட்டையில் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் உட்பட 9 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழு நேர்காணலை நடத்தியது.

இதில் ஒரு தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்த அனைவரையும் ஒரே நேரத்தில் வரவழைத்து  அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. இதன் மூலம் ஒரே நாளில் அனைத்து தொகுதிகளுக்கும் நேர்காணலை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நேர்காணலின் போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நெருங்கி  வருவதாலும், திடீரென தேர்தல் அறிவித்துவிட்டதாலும் அனைவருக்கும் ஒரே நாளில் நேர்காணல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது என்று கூறினார்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 15க்கும் அதிகமானோர் விருப்ப மனு வழங்கியுள்ளனர். ஆனால் அதில் ஒருவருக்கு  தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற அவர் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

பின்னர், பேசிய துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு எந்த வித சேதாரமும் குறைவில்லாமல் எடப்பாடி ஆட்சி நடத்தி வருகிறார் என்றார்.

வெற்றி பெறுவது மட்டுமே நம் இலக்கு என்ற அவர் அதனை நோக்கி செல்ல வேண்டும் என்றார். விருப்ப மனு தாக்கல் செய்த அனைவரும் பணம் கட்டியதற்காக அசல் ரசீது கொண்டு வர வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அதிமுக வரலாற்றில் முதன் முறையாக விருப்ப மனு கொடுத்த அனைவருக்கும் ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

  • Share on

காந்திய மக்கள் இயக்கம் தமிழருவி மணியன் அதிரடி அறிவிப்பு

பெட்ரோல் நிலையங்களில் உள்ள மோடி படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் கெடு

  • Share on