மேற்கு வங்கத்தில் பாரதீயஜனதா வெற்றி பெற்றால் தொழிலையே விட்டு விடுகிறேன் – அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சியினருக்கு வகுத்து கொடுத்து வெற்றி பெற செய்பவர் பிரசாந்த் கிஷோர். இவர் ஐபேக் என்ற நிறுவனம் மூலம் வியூகம் வகுத்துக் கொடுத்து பல கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன. இதற்காக இவர் பல கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் தி.மு.க.வுக்கும் மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரணாமூல் காங்கிரசுக்கும் பல கோடிக்கணக்கில் தேர்தல் வியூகங்களை கொடுத்து வருகிறார். அதேபோல் பஞ்சாப் முதல்-மந்திரியின் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் இந்தியா டுடே டெலிவிஷன் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
மேற்குவங்காளத்தில் பாரதீய ஜனதா 100 இடங்களுக்கும் அதிகமாக வென்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன். ஐ-பேக் நிறுவனத்தை மூடிவிடுவேன்.
மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி, எங்களுக்கு நிறைய சுதந்திரம் வழங்கி உள்ளார். பாரதீய ஜனதாவின் சில கூட்டங்களில் 200- அல்லது 300 பேர் கூட வருவதில்லை. மோடி கூட்டத்துக்கு மட்டும் தான் கூட்டம் வருகிறது.
நிறைய பேர் திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாரதீய ஜனதாவுக்கு தாவுவதும், மற்ற கட்சி தலைவர்களிடம் ஆசைவலை விரிப்பது பாரதீய ஜனதாவின் உத்தி.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.