• vilasalnews@gmail.com

சசிகலா அரசியலை விட்டு ஒதுங்க பாஜக அழுத்தம் தரவில்லை - தேசிய மகளிரணி தலைவர்

  • Share on

சசிகலாவின் விலகலுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். அதிமுக கட்சி மற்றும் ஆட்சியில் எது நடந்தாலும் அது பாஜகவின் அழுத்தம் என்று சிலர் கூறி வருகின்றனர் அது தவறானது என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

பெங்களூரு சிறையில் இருந்து பிப்ரவரி 8ஆம் தேதி சென்னை திரும்பிய சசிகலாவிற்கு 23 மணி நேரம் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பும் மக்கள் கூட்டமும் பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தியது.

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொன்ன சசிகலா கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மவுனம் காத்து வந்தார். புயலுக்கு முன்பான அமைதி போல இருக்கிறதே என்று பல அரசியல் நோக்கர்களும் கருத்து கூறினர். அவரது மவுனம் நேற்று கலைந்தது. அரசியலை விட்டு ஒதுங்குவதாக அவர் அறிக்கை வெளியிடவே சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சி தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன் என்று கூறியுள்ளார்.

சசிகலாவின் இந்த திடீர் முடிவுக்கு டிடிவி தினகரன் அதிர்ச்சி தெரிவித்தாலும் பாஜக தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதிமுகவில் திமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமியும் சசிகலாவின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

இதனிடையே சசிகலாவின் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்துள்ள பாஜகவின் மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், அரசியலை விட்டு விலகுவது சசிகலாவின் தனிப்பட்ட முடிவு. அவரின் அரசியல் மற்றும் கருத்துகள் மீது எதிர்பார்ப்பு இருந்தது என்று கூறியுள்ளார்.

தற்போது அவர் அரசியலில் இருந்து விலகி உள்ளார். அதிமுக கட்சி மற்றும் ஆட்சியில் எது நடந்தாலும் அது பாஜகவின் அழுத்தம் என்று சிலர் கூறி வருகின்றனர். அது தவறானது, அதே போல சசிகலாவின் விலகலுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ளார்.

சசிகலாவிற்கு ஏதாவது அழுத்தமிருந்தால் அதை அவர்களே சொல்லியிருப்பார்கள். அதிமுகவிற்கு என்றுமே முதல் எதிரி திமுக. அதனால் தான் தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


  • Share on

எந்த சைடு போட்டாலும் கலாம் வரலேயே சார்... ஒரு flow ல சொன்னது குத்தமா

சசிகலா விலகியது ஏன்? டிடிவி தினகரன் பரபர பேட்டி!

  • Share on