கலாம் என்ற பெயரை திருப்பி போட்டால், கமல் என்று வரும்' என்று கமல் கூறியதை அடுத்து வலைத்தளவாசிகள் பல்வேறுவித சோதனைகளில் ஈடுபட்டு,'எப்படி பார்த்தாலும் கலாம்ன்னு வரலேயே என்று சமூக வலைதளத்தில் கிண்டலடித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் மும்மூரம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு வகையில் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் வெற்றி நடை போடும் தமிழகமே, ஸ்டாலின் தான் வராரு போன்ற பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தன. இதையடுத்து தற்போது மக்கள் நீதி மையத்தின் தடைகளை இனி கடக்கலாம் என்று கமல்ஹாசனே பாடியுள்ள பாடலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பிப்ரவரி 27ம் தேதி முத்த அரசியல்வாதி பழ. கருப்பையா மக்கள் நீதி மையத்தில் இணைத்தார். அதேபோல் சட்டபஞ்சாயத்து இயக்கமும் மக்கள் நீதி மையத்தில் இணைந்து இருந்தது. அந்த வரிசையில் தற்போது அப்துல்கலாமின் ஆலோசகரான பொன்ராஜ் மக்கள் நீதி மையத்தில் இணைந்து உள்ளார். அவரை துணை தலைவராக நியமித்து உள்ளார் கமல்
அந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன்"கலாம் என்ற பெயரை திருப்பி போட்டால் கிட்டத்தட்ட ஏன் பெயர் வரும் என்று கூறினார்.
கமலின் இந்த பேச்சு விவாத பொருளாக ஆகியுள்ளது. வலைத்தளவாசிகள் கமல் பெயரை திருப்பி போட்டு பார்க்கும் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கமல் என்ற பெயரை திரும்பி போட்டால்,ல்மக ன்னு தான் வருது இங்கிலீஷ் ல திருப்பி போட்டால் lamakனு தான் வருது, கலாம் ன்னு எங்க வருது என தனக்கு தானே கேட்டுக்கொண்டனர்.
பல்வேறு கட்ட சோதனைக்கு பிறகு, கமல் என்ற பெயரை எப்படி திருப்பி போட்டாலும் கலாம்ன்னு வரலையே, அப்புறம் எப்படி கமல் அப்படி சொன்னாரு? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.