• vilasalnews@gmail.com

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் சரத்குமார் மீண்டும் தேர்வு

  • Share on

சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டத்தில்  கட்சியின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும்  சரத்குமார் மீண்டும் தேர்வு பெற்றார்.

சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி – திருநெல்வேலி சாலை மறவன்மடம் பகுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக கட்சியின் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் கட்சியின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் சரத்குமார் மீண்டும் தேர்வு பெற்றார்.

புதிதாக கட்சியில் தோற்றுவிக்கப்பட்ட முதன்மை துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார். பொருளாராக A.N. சுந்தரேசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.


தேர்வு செய்யப்படவர்கள் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். அதன் பின்னர் முதன்மை துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் குத்து விளக்கேற்றி 6 வது பொதுக்குழுவினை தொடங்கி வைத்தார்.

பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் மாநில,மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள்,சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பல்லாயிரகணக்கான கட்சி தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். கட்சியின் நிர்வாகிகளின் வாழ்த்துரைக்கு பின்னர் சரத்குமார் சிறப்புரையாற்றுகிறார்.

கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல்  கூட்டணி குறித்த அறிவிப்புகள் தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

  • Share on

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு வரும் சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் – சரத்குமார்

எந்த சைடு போட்டாலும் கலாம் வரலேயே சார்... ஒரு flow ல சொன்னது குத்தமா

  • Share on