• vilasalnews@gmail.com

திமுக அண்ணா அறிவாலயம் ரெட்லைட் ஏரியா வா? பரபரப்பாக்கிய பொன்னார்!

  • Share on

சென்னை அண்ணா அறிவாலயம் பற்றி பேசுகிற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் சென்னை அண்ணாசாலை பக்கமாவது வரட்டும் என்று திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்து பேசியதற்கு, அறிவாலயம் என்ன ரெட்லைட் ஏரியா வா? என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் விமர்சித்து Get Out Modi என சொல்லித்தான் பார் என்றார். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையாக பேசியது அவர்களுடைய தரம். பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். கேட்கக்கூடிய நிதியை வாங்கி தர துப்பில்லை இவர்கள் சவால் விடுகிறார்கள்.


தமிழ்நாட்டு மக்கள் இவர்களை Go Back Modi என்று சொல்லிவிட்டார்கள். 2018 ஆம் ஆண்டு திருட்டுத்தனமாக சுவரை உடைத்துக் கொண்டு மோடி வந்தார். மக்களை சந்திக்க பயந்தார். கருப்புக்கொடி காட்டினார்கள். பலூன் பறக்கவிடப்பட்டது. அதெல்லாம் அவர்களுக்கு ஞாபகம் இருக்கும். இந்த நிதி தொடர்பான பிரச்சினையை திசை திருப்ப பார்க்கிறார்கள். போஸ்டர் ஒட்டுவதெல்லாம் ஒரு சாதனையா? நான் வீட்டில் தான் இருப்பேன் வரட்டும்.


அண்ணா அறிவாலயம் குறித்து அண்ணாமலை ஏதோ கூறினாரே, முடிந்தால் அண்ணா சாலை பக்கமாவது வரட்டும். பிரச்சினையை உதயநிதிக்கும் பாஜக மாநில தலைவருக்கும் என மாற்ற முயற்சிக்கிறார்கள். நிதியை பெற்று தர முயற்சி செய்ய சொல்லுங்கள என கூறியிருந்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.


துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த பேச்சுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்து கூறுகையில்:- 


அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டிருக்கிறார். அண்ணாமலை இருக்கட்டும் நானே வருகிறேன். எங்கே வரனும் என சொல்லுங்க? என்னைக்கு வரனும் என சொல்லுங்க? டைமை குறிங்க


தமிழக முதல்வர் அவர்களே, இது தமிழ்நாடு. 8 கோடி மக்களுக்கும் சொந்தமானது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பகுதிகளும். இதில் அண்ணா அறிவாலயத்துக்கு முன்னால் வரக் கூடாது என சொன்னால், அது ரெட்லைட் ஏரியாவா (விபசாரம் செய்யும் இடமா ) ? அங்க வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு உங்களுக்கு என்ன தைரியம் இருக்க முடியும்? கேவலமான ஒன்று.


உதயநிதி ஸ்டாலின் தம்முடைய வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும். ஒரு பக்கத்தில் குழந்தைகளை அப்பா என கூப்பிட சொல்றாங்க, சரி சந்தோஷப்படுவோம். அது தப்பு கிடையாது. ஆனால் எங்க பகுதிக்கு வரக்கூடாது என சொன்னால், ஜெயலலிதா அம்மாவை இவர்கள் நினைவு கொள்ள வேண்டும்.


மதிமுகவின் துவக்க காலத்தில் அண்ணா அறிவாலயப் பக்கத்தில் ஒரு பெரிய ஊர்வலமாக வந்து இதே அறிவாலயம் மீது தாக்குதல் வரும் என்ற நிலை இருந்தது. அன்றைக்கு ஜெயலலிதாதான் பாதுகாப்பு கொடுத்தார். இன்றைக்கு வேற ஏதாவது மாற்றி எங்க பகுதிக்கு வந்துடாதீங்க என சொல்கிறார்கள் எனில் ஒன்று அவர்கள் அறிவாலயத்தை தவறாக நடத்துகிறார்கள் என்கிற பொருளில் முடியும். அது வேறு ஒரு விஷயம். சவால் விடுகிறீர்கள் எனில் நாங்கள் வருகிறோம்.


நாங்கள் ரெட்லைட் ஏரியா என சொன்னதால் அதற்குதான் வருகிறீர்களா? என அடுத்த கேள்வி கேட்பார்கள். இந்த குசும்பு வேலை எல்லாம் செய்வாங்க. நீங்க சவால்விடுங்க நாங்க வருகிறோம். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய் இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


பொன்.ராதாகிருஷ்ணன், அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா? என அதிர்ச்சி தரும் விமர்சனத்தை முன்வைத்துள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் திமுக - பாஜக இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

திமுகவில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம்... கலக்கத்தில் அமைச்சர்கள்!

கூட்டம் சேர்க்கனும்... எனக்கு வேறு வழி தெரியல ஆத்தா : பொதுக் கூட்டத்திற்கு வாங்க, கோல்டு காயினை எடுத்துட்டு போங்க!

  • Share on