தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு 6ம் கட்ட பிரச்சாரத்திற்கு வருகை தந்து, பிரச்சாரத்தை முடித்து சென்னை கிளம்பிய, தமிழக முதல்வர் பழனிச்சாமியை, தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெற்றி நடைபோடுகிறது தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அதிமுக திட்டங்கள் மற்றும் சாதனை பட்டியலை விளக்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதைத் தொடர்ந்து 5-வது கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த வகையில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி 6ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் பழனிசாமி தூத்துக்குடியில் தொடங்கினார். அதனையடுத்து 18, 19ம் தேதிகளில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு 6ம் கட்ட பிரச்சாரத்திற்கு வருகை தந்து, பிரச்சாரத்தை முடித்து சென்னை கிளம்பிய, தமிழக முதல்வர் பழனிச்சாமியை, தூத்துக்குடி விமான நிலையத்தில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகநாதன், சின்னப்பன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் சரண்யா அரி உள்ளிட்டோர் வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்வில், கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.