• vilasalnews@gmail.com

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர்கள் தமிழகம் வருகை

  • Share on

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் விரைவில் தமிழகம் வர உள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், வரும் 19ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார். 21ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலம் வருகிறார். அதைத்தொடர்ந்து, கடந்த வாரம் நலத்திட்டங்களை திறந்து வைக்க வருகை தந்திருந்த பிரதமர் மோடி, மீண்டும் 25ஆம் தேதி கோவை வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா 28ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகவும், விழுப்புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இம்மாத இறுதியில் ஜே. பி. நட்டா தமிழகம் வரவுள்ள நிலையில் தேதி உறுதி செய்யப்படவில்லை.

  • Share on

திமுக எம்எல்ஏக்கள் தொகுதியாக இருந்தாலும் தொடர்ந்து செல்வேன் யாரும் தடுக்க முடியாது - எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா

விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

  • Share on