• vilasalnews@gmail.com

யார் அந்த சார்? போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்!

  • Share on

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் யார் அந்த சார்? என்ற கேள்வியுடன் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.


சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


அதைத் தொடர்ந்து, மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை(FIR) வெளியானதையடுத்து போராட்டங்களும் சர்சைகளும் வெடித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது வரை பல விஷயங்கள் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக , அதிமுக சார்பில் கண்டன குரல்கள் எழுந்த நிலையில், 'யார் அந்த சார்?' என அதிமுக சார்பில் ஒட்டப்படுவரும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது இந்த சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், ஞானசேகர் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.  மாணவியின் வாக்குமூலம் படி,  ஞானசேகர் தன்னை மிரட்டிய போது, சார் ஒருவருக்கும் நீ ஒத்துழைக்க வேண்டும் என கூறியதாக தெரிவித்துள்ளார்.


மேலும், அந்த சம்பவத்தின் போது ஞானசேகரனுக்கு ஒரு போன் வந்ததாகவும் அதில் மாணவியை மிரட்டி விட்டு அனுப்பி விடுவதாக தெரிவித்துள்ளார் ஞானசேகரன். எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் யார்? என கேள்வியானது எழுந்துள்ளது.


ஆனால், காவல்துறை தரப்பிலோ அப்படி சார் என யாரும் இல்லை. மாணவியை மிரட்டவே தனது போனுக்கு வராத கால்களை காட்டி மிரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்த போது யார் அந்த சார் ? ஏன் அவரை கைது செய்யாமல் காவல்துறை மறைக்கிறது என கேள்வி எழுப்பினார். 


இந்நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் யார் அந்த சார் ? என கேள்வி எழுப்பி தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? Save our daughter's  என அச்சிடப்பட்டுள்ளது.

  • Share on

மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி - ராமதாஸ் இடையே மோதல்..பரபரப்பில் பாமக!

இன்று 57 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார் தூத்துக்குடி எம்பி கனிமொழி!

  • Share on