• vilasalnews@gmail.com

திமுக எம்எல்ஏக்கள் தொகுதியாக இருந்தாலும் தொடர்ந்து செல்வேன் யாரும் தடுக்க முடியாது - எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா

  • Share on

திமுக எம்எல்ஏக்களின் தொகுதிகளில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்வதை யாரும்  தடுக்க முடியாது என  எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா அடம்பிடிப்பதாக அரசியல் விமர்சனம் எழுந்துள்ளது.

மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ராஜன்செல்லப்பா. இவர் மதுரை கிழக்கு மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதாகவும் திருப்பரங்குன்றம் தொகுதியில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளில் முயற்சியாளர் என தனது பெயரை குறிப்பிட்டு பேனர் வைப்பதாகவும் திருப்பரங்குன்றம் மற்றும் கிழக்கு தொகுதி எம் எல் ஏக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

இதற்கு பதில் அளித்து செல்லூரில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பேசிய வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா :

திமுக எம்எல்ஏக்கள் தொகுதியாக இருந்தாலும் அம்மா மினி கிளினிக் போன்ற அரசு விழாக்களுக்கு ஊராட்சி தலைவர் அழைப்பதால் செல்கிறேன் தொடர்ந்து செல்வேன் யாரும் தடுக்க முடியாது என பகிரங்கமாக பேசினார். 

மேலும் கலெக்டர் முன்னிலையிலேயே தங்களிடம் எழுத்துப்பூர்வமான பதிலை தருவதற்கு பதிலாக இந்த நிகழ்ச்சியில் கூறி விடுவதாக குறிப்பிட்டார்.

அமைச்சராக இருந்தால் தான் எந்தத் தொகுதியிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு சென்று தலைமை வகிக்கலாம் என்ற மரபை மாற்றி மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே தான் செய்தது சரிதான் என ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், மொழிப்போர் தியாகி முன்னாள் எம்பி திமுகவைச் சேர்ந்த அக்னி ராஜ் குடும்பத்திற்கும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ராஜன் செல்லப்பா கூறினார்.

  • Share on

ஏழை, எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாக திமுக செயல்படும்

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர்கள் தமிழகம் வருகை

  • Share on