• vilasalnews@gmail.com

இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை இது..செல்லூர் ராஜு கலாய்ப்பு!

  • Share on

200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று திமுக சொல்வது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 


சினிமா துறையில் இருந்து வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், யாரையோ தாக்க வேண்டும் என்பதற்காக சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று கூறுவது வேடிக்கையானது. சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தை திருத்த வேண்டாமா?


புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது 100 சதவீதம் உண்மையானது. திருமாவளவனை பொறுத்தவரை, அவருக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது. இருப்பினும் மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக அவர் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார் என்று நான் கருதுகிறேன்.


சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதலமைச்சரும், அமைச்சர்களும் சொல்வதுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பதவிகளை வழங்கி, இன்று குடும்ப ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

  • Share on

வார்த்தையை விட்ட விசிக எம்எல்ஏ ஷா நவாஸ்.. வலுக்கும் கண்டனம்!

எடப்பாடி பழனிச்சாமிக்கு தைரியம் இல்லை... தூத்துக்குடி ஜோயல் குற்றச்சாட்டு!

  • Share on