நெல்லை அதிமுக நிர்வாகிகள் களஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவினர் இரண்டு அணியாக பிரிந்து மோதிக்கொண்டனர்.
2026 சட்டப்பேரவை தேர்தலில், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என அதிமுக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர்கள், மூத்த அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். மாவட்ட அளவிலான கூட்டங்கள் நடைபெறுகின்றது.
அந்த வகையில், திருநெல்வேலியில் இன்று அதிமுக களஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகள் கள ஆய்வு கூட்டத்திற்கு வந்திருந்த நிலையில், தற்போதைய மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா, கட்சிப்பணிகளை சரிவர செய்யவில்லை என ஒரு தரப்பிரனர் கூற,மாவட்ட செயலாளர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க, இருதரப்பு தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் கலந்துகொண்ட கூட்டத்தில் இருதரப்பினர் மோதலில் ஈடுபட்ட சம்பவத்தால், அங்கு பரபரப்பான சூழல் உண்டானது.