2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இந்த மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் தான் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தர்மபுரியில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட தலைவர் தா.ப. சிவா பேசுகையில்:-
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் நமது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என உறுதியாக நான் கூறுகிறேன். இந்த தருமபுரி மண் அதியமான் பிறந்த மண், அவ்வையார் வாழ்ந்த மண். எங்கள் தொகுதியில் நீங்கள் நின்று முதலமைச்சர் ஆக வேண்டும் என நாம் கோரிக்கை வைத்தோம். நம் கோரிக்கையை ஏற்று தர்மபுரியில் தான் போட்டியிடுவேன் என தலைவர் சொல்லி 10 நாள் ஆகிறது. ஆனால் இன்று தான் அதை வெளியிடுகிறேன் இவ்வாறு பேசினார்.
விஜய் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.