சென்னையில் திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-
திமுக கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி. நாட்டின் மதச்சார்பின்மையை காப்பது முக்கிய கொள்கை. இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது. வெற்றி வாய்ப்புகள் மற்றும் எதிர்ப்புகளை வலுவாக வெளிப்படுத்தக்கூடிய கூட்டணி. இந்தியா கூட்டணி மிக வலிமையாக உள்ளது. ஜனநாயக நாட்டில் கட்சி தொடங்குவதற்கும், அரசியல் பேசுவதற்கும் எல்லோருக்கும் உரிமையுள்ளது. இதற்கு நான் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணி குறித்து மிகத் தெளிவாக கூறிவிட்டார். அவர் உட்பட கூட்டணி தலைவர்கள் எந்தெந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் என்பதை எல்லாம் நாங்கள் கண்காணிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது. இவ்வாறு கூறினார்.