• vilasalnews@gmail.com

டிடிவியை நம்பினா நடுரோட்டில் தான் நிக்கோணும் : எடப்பாடி பேச்சு

  • Share on

டிடிவியை  நம்பினா நடுரோட்டில் தான் நிக்கோணும் என, வேலூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

வேலூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்:

அதிமுகவை பின்னடையச் செய்வதற்கு சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் டிடிவி தினகரன் அதில் ஒருவர். பத்தாண்டு காலம் கட்சியிலே கிடையாது. அம்மா அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்கி வச்சிருந்தாங்க.

அம்மா மறைவுக்குப் பிறகு அவர் கட்சியில் சேர்ந்து விட்டதா அவரே அறிவித்து விட்டார். அவர் அதிமுகவை கைப்பற்றுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தார் தெரியுங்களா?

எங்க கட்சி எம்எல்ஏக்கள் 18 பேரை பிடித்து விட்டு போயிட்டாரு அந்த 18 பேரையும் நடுரோட்டில் விட்டுட்டு போயிட்டாரு. அவரை நம்பி போனவர்கள் எல்லாம் நடுரோட்டில் தான் நிக்கணும். இப்படி ஏதாவது செஞ்சு அதிமுகவை பின்னடைவை ஏற்படுத்தி திமுகவுக்கு உதவுவதற்காக சில பேரு சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள் அதையும் எங்க அரசு, எங்க கட்சி முறியடிக்கும்.

திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று எம்ஜிஆர் தன் இறுதி மூச்சு வரை போராடினார். அதே வழியில் ஜெயலலிதாவும் நின்றார் சில சதிகாரர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சதி வலையை இன்றைக்கு பின்னிக் கொண்டு இருக்கிறார்கள் அந்த வலையை சின்னாபின்னமாக தூள் தூளாக தகர்த்தெரிந்து அம்மா அரசு தொடர நாம் பாடுபடுவோம்.

அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. ஏனென்றால், அந்த இரு பெரும் தலைவர்கள் தனக்காக வாழ வில்லை. நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர்கள் இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சசிகலா சென்னையில் வந்துள்ள நிலையில் முதல் முறையாக பிரச்சாரக் கூட்டத்தில் டிடிவி தினகரனை  நேரடியாகத் தாக்கி எடப்பாடி பழனிச்சாமி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 17ஆம் தேதி முதல்வர் பழனிசாமி வருகை.

ஏழு பேர் விடுதலைக்கு 78 லட்ச ரூபாய் செலவு செய்த ஒரே கட்சி மதிமுக - மதுரையில் வைகோ பேச்சு!

  • Share on