• vilasalnews@gmail.com

அ.தி.மு.க.வே 3வது முறையாக ஆட்சி அமைக்கும்: குமுதம் இதழ் வெளியிட்ட சர்வே முடிவு

  • Share on

தமிழகத்தில் வரப்போகின்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் 3வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று குமுதம் வார இதழ் எடுத்த சர்வே முடிவை வெளியிட்டுள்ளது.

தற்போது குமுதம் இதழ் வெளியிட்ட சர்வே முடிவால் திமுக அப்செட்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்லும் இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கொரோனா காலக்கட்டத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இரவு, பகலாக வேலை பார்த்து வந்தனர். அதிகாரிகளிடம் ஆலோசனை மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை என தினமும் மேற்கொண்ட காரத்தினால் இந்தியாவிலேயே அதிகமான உயிரிழப்புகளை தடுத்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.


இந்நிலையில், வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்கள் என்று குமுதம் வார இதழ் சர்வே ஒன்றை எடுத்து அதனை வெளியிட்டது.

அந்த சர்வே முடிவுகளில், அதிமுக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறியுள்ளது. மேலும், திமுக கூட்டணி 109 தொகுதிகள் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது.

அதிமுக கூட்டணிக்கு 45.2 சதவீத வாக்குகளும், திமுக கூட்டணிக்கு 44.1 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கூறியுள்ளது. இந்த சர்வே முடிவுகளால் அதிமுக சுறுசுறுப்பு அடைந்துள்ளது. அது மட்டுமின்றி கூட்டுறவு வங்கிகளில் விவசாயக்கடன் தள்ளுபடி செய்தது கூடுதல் பலம் எனவும் பார்க்கப்படுகிறது.

மீண்டும் அதிமுக கூட்டணி ஆட்சி அமைப்பதால் அந்த கூட்டணி உற்சாகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

"செட்டப்.. பூரா செட்டப்.. ஸ்டாலினால் நிறைய பேர் நொந்து போய்ட்டாங்க".. போட்டு தாக்கும் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 17ஆம் தேதி முதல்வர் பழனிசாமி வருகை.

  • Share on