• vilasalnews@gmail.com

தமிழகம் வந்த ராகுல் ஸ்டாலினை சந்திக்காதது ஏன்?

  • Share on

இரண்டு முறை தமிழகம் வந்த ராகுல் ஸ்டாலினை சந்திக்காதது எல்லாம் காரணமாகத்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதாவது எதிர்வரும் தேர்தலில் பிரம்மாண்டமான வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு குறைந்த அளவிலான சீட்டுகளை மட்டுமே ஒதுக்க அக்கட்சித் தலைமை முடிவு செய்திருக்கிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 முதல் 18 தொகுதிகள் வரை தான் கிடைக்கும் என்கிற தகவல் பரவியது. இதை சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாஜி மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டு உடைத்துவிட்டார். இதற்குப் பிறகுதான் கூடுதல் தொகுதிகள் கேட்டு பெற வியூகம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராகுலை தமிழகத்திற்கு வரவழைத்து பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி "ராகுலின் தமிழ் வணக்கம்" என்ற தலைப்பில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார் எம்பி மாணிக்கம் தாகூர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் முறையாக ஜல்லிக்கட்டை பார்வையிட வந்தார் ராகுல். இந்நிகழ்ச்சிக்கு ஓரளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கவே அடுத்த கட்டமாக கொங்கு மண்டலத்தில் டூர் அடிக்க வைத்தனர். இதில் ராகுல் பங்கேற்ற வீடியோக்கள் வைரலானது. குறிப்பாக கரூரில் காளான் பிரியாணி சாப்பிட்ட வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாக்களில் வேகமாக பரவ ஆரம்பித்தது. வெங்காயம், தயிர், கல் உப்பு என்று ராகுல் தமிழில் பேசிய வீடியோ கலக்கல் ஆனது.

இந்த நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பேசிய குண்டுராவ், திமுக கூட்டணியில் நாம் அதிக இடங்களை பெற வேண்டுமென்றால் டெல்லி தலைவர்கள்தான் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலினை  ராகுல் சந்தித்து, எங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்து விட்டால் போதும் அதை திமுக தலைமை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும் என்றார். இதற்கு பிறகுதான் ராகுலின் மூன்றாவது கட்ட வருகை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் 5 கட்ட டூர் அடிக்க முடிவு செய்திருக்கும் ராகுல், சென்னையை மட்டும் தனது லிஸ்டில் வைத்துக் கொள்ளவில்லையாம். காரணம், சென்னைக்கு வந்தால் ஸ்டாலினை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது, தொகுதிப் பங்கீடு குறித்து பேசினால் எதிர்பார்க்கும் அளவுக்கு தொகுதிகளை ஸ்டாலின் தரமாட்டார். ஆகவே தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு ஸ்டாலின் சந்தித்துக் கொள்ளலாம். அந்த நெருக்கடியான சமயத்தில் சந்தித்தால் நாம் கேட்கும் அளவுக்கு தொகுதிகள் கிடைக்கும் என்று முடிவு செய்து இருக்கிறாராம். இதுதான் ஸ்டாலின் சந்திக்காமல் தவிர்த்து வருவதற்கு காரணம் என்கிறார்கள் கதர் பார்ட்டிகள்.

  • Share on

அடுத்து என்ன செய்யலாம் ஜோதிமணி எம்பியிடம் கேட்ட ராகுல்!

சசிகலா வருகை - அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று அவசர ஆலோசனை

  • Share on