• vilasalnews@gmail.com

திமுக அணியில் மதிமுகவுக்கு 2 சீட்தான்..?

  • Share on

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 2 இடங்கள்தான் ஒதுக்கப்படும் என திட்டவட்டமாக கூறிவிட்டதில் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ படு அப்செட்டில் இருக்கிறாராம். இருந்தபோதும் இதனையும் ஏற்றுக் கொண்டு தென் மாவட்ட சட்டசபை தொகுதி ஒன்றில் மகன் துரைவையாபுரியை போட்டியிட வைக்கவும் முடிவு செய்துள்ளாராம் வைகோ.

சட்டசபை தேர்தலில் திமுக அணியில் கூட்டணி கட்சிகளுக்கு மிக குறைவான இடங்களே இம்முறை ஒதுக்கப்பட உள்ளது. திமுகவைப் பொறுத்தவரை அதிக எண்ணிக்கையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பதை மட்டுமே இலக்காக வைத்துள்ளது.

இதனால் கூட்டணி கட்சிகளுக்கு சொற்ப இடங்களைத்தான் ஒதுக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி தவிர பிற கூட்டணி கட்சிகள் அனைத்துக்குமே சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் என்பதை பேச்சுவார்த்தைகளில் திமுக நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் அந்த கூட்டணி கட்சிகள் என்ன இவ்வளவு சொற்பமான இடங்கள்தானா? என மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கின்றன.

12 தொகுதிகள் கேட்ட வைகோ

மதிமுகவைப் பொறுத்தவரையில் தங்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என தொகுதிகளின் பெயர்களை வைகோ எழுதியே கொடுத்திருந்தாராம். இதனை பரிசீலித்த திமுக தரப்பு அதிகபட்சம் 2 இடங்கள்தான் இம்முறை தர முடியும் என உறுதியாக சொன்னதாம். இருந்தபோதும் எப்படியும் 6 இடங்களாவது திமுக தரும் என நம்பிக்கையோடு காத்திருந்தாராம் வைகோ.

மதிமுகவுக்கு 2 இடங்கள்

திமுகவோ 2 இடங்களுக்கு மேல் இல்லை என திட்டவட்டமாக சொன்னதாம். இதனை கேட்டு வைகோ ரொம்பவே அதிர்ச்சி அடைந்து போய்விட்டாராம். வைகோ மிகவும் அதிருப்தியாக இருப்பதை திமுக தலைவர்கள் ஒருவருக்க்கு ஒருவர் இம்முறையும் ஏதேனும் கடைசி நேரத்தில் முடிவு எடுப்பாரோ வைகோ என விவாதித்துக் கொண்டிருக்கின்றனராம்.

வைகோ அப்செட்

இன்னொரு பக்கம், ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியில் பிரச்சனையாகிப் போவது, கூட்டணியைவிட்டு வெளியேறிப் போவது என செய்வதே மதிமுகவின் போக்கு என்கிற விமர்சனம் ஏற்கனவே உள்ளது. இதனால் பல்லைக் கடித்துக் கொண்டு 2 சீட்டையும் ஏற்றுக் கொள்ளலாமா என வைகோ யோசிக்கிறாராம். இதற்கு பின்னணி காரணம் ஒன்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

வைகோ மகன் போட்டி?

வைகோ மகன் துரை வையாபுரியை இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளாராம். கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் ஆகிய 3 -ல் ஒன்றில் துரை வையாபுரியை போட்டியிட வைப்பது என்பது வைகோவின் திட்டம். கோவில்பட்டி தொகுதியில் திமுக சீனியர் ஒருவரிடம் போட்டியிட முடியுமா? என கட்சித் தலைமை கேட்டிருக்கிறது. இவ்வளவு காலம் போனபிறகு வாய்ப்பு தருகிறீர்களே? என்கிற குமுறலோடு எனக்கு சீட் வேண்டாம் என்கிற பதிலை சொல்லியிருக்கிறாராம் அந்த சீனியர். ஆகையால் கோவில்பட்டியில் துரை வையாபுரி போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவலும் வெளியாகி உள்ளன.

  • Share on

அதிமுக ஐடிவிங்ன் பிரசார வியூகம் - தொகுதிக்கு 150 'அம்மா' வாட்ஸ் அப் குரூப்

மார்ச் முதல் வாரத்தில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு?

  • Share on