சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு தொகுதியிலும் 150 "அம்மா" வாட்ஸ் அப் குரூப்புகளை உருவாக்கி பிரசாரம் செய்ய அதிமுகவின் ஐடி விங் திட்டமிட்டுள்ளதாம்.
சட்டசபை தேர்தலில் சமூக வலைதளங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்கள் மூலம் மக்களை சென்றடைவதற்கான அத்தனை வழிகளையும் அத்தனை கட்சிகளும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
ஒவ்வொரு கட்சியின் ஐடிவிங்கும் இதற்கான பணிகளில் தீவிரம் காட்டுகின்றன. அதிமுகவின் ஐடி விங் தரப்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் 150 "அம்மா " வாட்ஸ் குரூப் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளாக பிப்.24-க்கு முன்னதாக இந்த வாட்ஸ் அப் குரூப்புகள் உருவாக்கப்படுமாம். அம்மாவின் நல்லாட்சி தொடர என்ற முழக்கத்துடன் அதிமுக அரசின் சாதனைகளை இந்த வாட்ஸ் குரூப் மூலம் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனராம். 8300234234 என்ற எண் மூலம் இந்த வாட்ஸ் குரூப்பில் இணையலாமாம்.
ஐபேக் டீம் வைத்து அரசியல் கட்சி தலைமை ஒருபுறம் வியூகம் வகுத்து செயல்பட்டாலும், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் நாங்களும் சலைத்தவர்கள் அல்ல என தங்களது கட்சி தலைமைக்கு உறுதுணையாக, கட்சி ஐடிவிங் செயல்பாடு இருக்கிறது என்று கூறப்படுகிறது.