• vilasalnews@gmail.com

காங்கிரசில் கருப்பு ஆடு.. திமுக கூட்டணியை உடைக்க அவருக்கு அசைன்மெண்ட்டா?

  • Share on

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் சமீபத்திய பேச்சுக்கள் திமுகவினர் சிலரை அப்செட் ஆக்கி உள்ளதாம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகையில், "நாம் சார்ந்து இருக்கப் போகிறோமா? சுயமாக இருக்கப் போகிறோமா? இன்னும் எத்தனை காலம் சார்ந்தே இருக்கப் போகிறோம்? நமது இயக்கத்திற்கு வரலாறு உண்டு. எவ்வளவு காலம் சார்ந்திருப்போம் என்பதற்கு விடை உங்களிடம் உள்ளது.

நாம் எந்த திசையில் செல்லப் போகிறோம்? எவ்வளவு காலம் பிறரை சார்ந்திருக்க முடியும்?' தனியாக போட்டியிடுவது பெரிய குற்றம் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 20 சதவீதம் வாக்குகளை பெற்றது. கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அக்கட்சியைச் சேர்த்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழகத்தில் இன்று 40-க்கு 40 வென்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திமுக. ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்கக் கூடாது. எதிரியை ஒழிக்காமல், எப்படி அந்த இடத்தை பிடிப்பீர்கள் என்று யோசியுங்கள். என்று பேசினார்.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் சமீபத்திய பேச்சுக்கள் திமுகவினர் சிலரை அப்செட் ஆக்கி உள்ளதாம். அதன்படி காங்கிரசில் கருப்பு ஆடு இருப்பதாக திமுகவினர் சிலர் நம்புகின்றனர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியை முறித்து அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரசில் சில கருப்பு ஆடுகளுக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டணியை உரசல் இல்லாமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டு செல்லும் முதலமைச்சரை இழிவுபடுத்தும் விதமாக இப்படி செய்ய கூடாது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மறைமுகமாக சிலர் வழி நடத்துகிறார்கள். அவர் திமுக கூட்டணியை உடைக்க பார்க்க கூடாது என்று திமுகவினர் குமுறி உள்ளனர்.

இதனால் இன்னொரு பக்கம் எடப்பாடி குஷி அடைந்துள்ளார். அதாவது திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையும். காங்கிரஸ் தங்கள் பக்கம் வரும். அதிமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என்று எடப்பாடி நினைக்கிறாராம். காங்கிரஸ் - திமுக கூட்டத்தை உடைக்க இந்த பிளான் எடுக்கப்பட்டு உள்ளதாம். 3 மாதங்களில் அதாவது பிப்ரவரிக்கு முன் கூட்டணியை முறிப்பதே இந்த இந்த ஆபரேஷன் திரிசூலம் என்கிறார்கள். 

சமீபத்திய பேச்சுக்களை பயன்படுத்தி காங்கிரஸ் - திமுக கூட்டணியை உடைக்க எடப்பாடி வேலைகளை பார்த்து வருகிறாராம். ஆனால் காங்கிரஸ் கட்சி உட்கட்சி வட்டாரங்கள் கூறுகையில், செல்வப்பெருந்தகை திமுக கூட்டணியை உடைக்க பார்க்கவில்லை. தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போல தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்க்க பார்க்கிறார். தமிழ்நாட்டில் காங்கிரசை தனி பெரும் கட்சியாக மாற்ற பார்க்கிறார். மற்றபடி திமுக உடன் மோதும் எண்ணம் எல்லாம் செல்வப்பெருந்தகைக்கு இல்லை என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

ஆனால் இதை எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. என்ன நடந்தாலும் கூட்டணி முறியாது. ஸ்டாலின் - ராகுல் உறவு அப்படி. ஏதாவது பிரச்சனை வந்தால் டெல்லியில் பேசி சரி செய்துவிடலாம் என்று ஸ்டாலின் நம்புகிறாராம் .

  • Share on

அமைச்சரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்த மு.க.ஸ்டாலின் : அதிரடியில் திமுக!

அதிமுக - அமமுக இணைப்பா? டிடிவி தினகரன் சுளீர் பதில்!

  • Share on