• vilasalnews@gmail.com

வடமாவட்ட கட்சி என்ற பெயரை பாமக-விடமிருந்து திமுக வாங்கி விடுமோ? ஆதங்கத்தில் தென்மாவட்ட நிர்வாகிகள்!

  • Share on

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் 3ல் மட்டுமே திமுக போட்டியிடுவது திமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அப்செட்டாக்கியுள்ளது.

ஒவ்வொரு நாடாளுமன்றத்தேர்தலின் போதும் வெற்றி பெற்ற பின்பு எங்களை கண்டுகொள்ளாத கூட்டணி கட்சியினருக்கு தொடர்ந்து வேலை செய்வதே தொடர்கதையாகி விட்டது என்று திமுக-வினர் கொந்தளிக்கிறார்கள்.

தற்போது தென்மாவட்டங்களில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில், தேனி தங்கதமிழ்செல்வன், தென்காசி ராணி ஸ்ரீகுமார், தூத்துக்குடி கனிமொழி என 3-ல் மட்டும்தான் திமுக போட்டியிடுகிறது. மற்ற அனைத்திலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் என்று கூட்டணி கட்சியினர்தான் போட்டியிடுகின்றனர்.

தமிழ்நாட்டில் ஆளும்கட்சியாக இருக்கும் இந்த சூழலிலும் பலமான கூட்டணி அமைந்துள்ள நிலையிலும் தென் மாவட்டத் தொகுதிகளில் போட்டியிட திமுக ஆர்வம் காட்டாதது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று புலம்பி தவிக்கின்றனர் தென்மாவட்ட உடன் பிறப்புகள்.

கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு மேல் வளர்ந்து விடுவார்கள் என்பதால் தென்மாவட்ட அமைச்சர்கள், நாடளுமன்றத் தேர்தலில் திமுக போட்டியிட வலியுறுத்துவதில்லையோ என்ற சந்தேகம் வருகிறது. இப்படியே போனால் வடமாவட்ட கட்சி என்ற பெயரை பாமக-விடமிருந்து திமுக வாங்கி விடும் என்று கூறுகின்றனர் கழக உடன்பிறப்புகள் ஆதங்கத்தோடு.

தென்மாவட்டத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு பெருவாரியான தொகுதிகளை ஒதுக்கியதை பார்க்கும் போது, இந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என்று சொன்ன அண்ணாமலையும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என அடுத்தடுத்து உள்ள தென்மாவட்டங்களில் அடுத்தடுத்து பாஜக கூட்டங்களில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் நிகழ்வை பார்க்கும் போது, தமிழ்நாட்டில் பிஜேபியின் பி டீம் திமுகவோ என்ற சந்தேகம் எங்களுக்கு வருகிறது என்று பகீர் கிளப்புகின்றனர் உடன்பிறப்புகள்.

இதெல்லாம் போதாதக்குறைக்கு, தென்மாவட்டத்தின் பெரும்பான்மை சமூகமாக விளங்கக்கூடிய நாடார் சமூகத்தினருக்கு திமுக வேட்பாளர் பட்டியலில் இடம் இல்லாமல் போனது கூடும் அதிர்ப்தியை திமுக தலைமை மீது ஏற்படுத்தி இருக்கிறதாம் தென்மாவட்ட உடன்பிறப்புகளுக்கு.

  • Share on

அவரே தான் இன்று இப்படி... வாரிசுக்காக ஒரு சீட் - வைகோவை சுற்றும் வாரிசு அரசியல் சர்ச்சை!

அமைச்சரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்த மு.க.ஸ்டாலின் : அதிரடியில் திமுக!

  • Share on