• vilasalnews@gmail.com

அவரே தான் இன்று இப்படி... வாரிசுக்காக ஒரு சீட் - வைகோவை சுற்றும் வாரிசு அரசியல் சர்ச்சை!

  • Share on

தனது வாரிசு அரியணை ஏறுவதில் முட்டுக்கட்டை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் எம்ஜிஆர், வைகோ போன்ற ஆளுமைகளை திமுகவிலிருந்து கட்டம் கட்டினார் கருணாநிதி என்பது பழைய அரசியல்.

இதனால் வாரிசு அரசியலை வைகோ கடுமையாக எதிர்த்தார். அது மட்டுமல்ல வாரிசை அதாவது ஸ்டாலினை முதல்வராக விடமாட்டேன் என்று சபதம் எடுத்தார். பின்னர் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன் என்றும் சபதம் எடுத்தார். திமுகவுடன் கூட்டணி அமைத்தார்.

மதிமுக தலைமை நிலைய செயலாளராக அவரது மகன் துரை வைகோ வந்தார். கட்சியினர் விருப்பத்தால் மகன் பதவிக்கு வந்தார் என்று காரணம் சொன்னார். இப்படி மாற்றம் கண்டு வந்த மதிமுகவில் அடுத்த மாற்றம் நேற்று அரங்கேறியது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைமை அலுவலகமான அறிவாயத்திற்கு நேற்று வந்தார். முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்து பேசினார். மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலினும் வைகோவும் கையெழுத்திட்டனர்.

திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான மதிமுக ஆட்சி மன்ற குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது. வைகோ, பொருளாளர் செந்திலதிபன், தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து அவைத்தலைவர் அர்ஜுனன் பேசும்போது, நிர்வாகிகள் துரை வைகோ துரை வைகோ என்று சத்தமாக கூறினர். அப்புறம் என்ன அவரே வேட்பாளராக முடிவு செய்யப்பட்டது. பின்னர் வைகோ கூறும் போது, "திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து கூட்டத்தின் ஆலோசிக்கப்பட்டதில், தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ போட்டியிட செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது". நிர்வாக குழுவும் துரை வைகோவின் பெயரை பரிந்துரை செய்தது என்றார்.

மதிமுக என்ற ஒரு திராவிட கட்சி தமிழகத்தில் உதயமாக காரணம் என்ன என்று அரசியல் தெரிந்த பச்சிளம் குழந்தை கூட சொல்லும், "வாரிசு அரசியலுக்கு எதிராக" என்று.

அன்று எதற்காக மதிமுக கட்சியை ஆரம்பிப்பதாக வைகோ கூறினாரோ, பின்னாளில் அவரே அதைச் செய்து சர்ச்சையில் சிக்கிவருகிறார் என்பது தான் நிசர்சனமான உண்மை.

  • Share on

35 வருடங்களுக்குப் பிறகு திண்டுக்கல்லில் களம் காணப் போகும் சி.பி.எம்... யார் இந்த வேட்பாளர் சச்சிதானந்தம்?

வடமாவட்ட கட்சி என்ற பெயரை பாமக-விடமிருந்து திமுக வாங்கி விடுமோ? ஆதங்கத்தில் தென்மாவட்ட நிர்வாகிகள்!

  • Share on