மதிமுக கட்சி வளர்ச்சி நிதிக்காக வைகோ சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக மதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்:
பிப்ரவரி 12ம் தேதி மாலை 3மணி முதல் தூத்துக்குடி வடக்கு,தெற்கு, நெல்லை மத்தியம், புறநகர்,தென்காசி,கன்னியாகுமரி, விருதுநகர் கிழக்கு, மேற்கு, ஆகிய பகுதிகளிலும்,13ம் தேதி காலை 10மணி முதல் சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை வடக்கு, தெற்கு, மாநகர் பகுதிகளிலும், அன்றைய தினம் மாலை 4 மணிக்கு திருச்சி மாநகர், திருச்சி புறநகர் தெற்கு, திருச்சி புறநகர் வடக்கு, அரியலூர், கரூர்,புதுக்கோட்டை பகுதிகளிலும், 14ம் தேதி காலை 10 மணி முதல் தஞ்சாவூர் தெற்கு, வடக்கு, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளிலும், 15ம் தேதி காலை 10 மணி முதல் கோவை மாநகர், கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு, திருப்பூர் புறநகர், திருப்பூர் மாநகர் பகுதி, அன்றைய தினம் மாலை 4 மணிக்கு நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் என அவ்வரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.