பாஜக வுடன் கூட்டணி முறிவுக்குப் பிறகு, தனது தலைமையில் மெகா கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தீவிரமாகச் செயல்பட்டார். அதேநேரத்தில், அதிமுக வுடன் கூட்டணியில் இருந்த ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டவர்களை பா.ஜ.க தன் வசப்படுத்திக்கொண்டது.
அதே நேரம் பாமக., தேமுதிக-வை எப்படியாவது நமது கூட்டணியில் தக்கவைத்து கொள்ள வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்த எடப்பாடிக்கு, தற்போது அதிர்ச்சி செய்தி ஒன்று வந்துள்ளதாம்.
அதாவது, அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் முன்னதாக வெளியான நிலையில், தற்போது அன்புமணி ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும், இதற்காக விரைவில் டெல்லி செல்லும் அன்புமணி, மத்திய பாஜக தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அதிமுக வட்டாரத்திற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.