நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கனிமொழி எம்.பி விருப்பமனு அளித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடமிருந்து விருப்ப மனு தாக்கல் மார்ச் 1ம் தேதி துவங்கியது. முன்னதாக கடந்த மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் விநியோகம் தொடங்கப்பட்டது. போட்டியிட விரும்புபவர்கள் 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி இந்த விருப்ப மனு அளித்து வருகின்றனர்.
விருப்பமனு அளிக்க வருகிற 7ம் தேதி கடைசி என்பதால், நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் போட்டி போட்டு விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கனிமொழி எம்.பி விருப்பமனு அளித்தார்.
இதனையடுத்து, கடந்த முறை போல, தூத்துக்குடி தொகுதியில் உங்களை எதிர்த்து மீண்டும் தமிழிசையோ அல்லது நிர்மலா சீத்தாராமனோ நின்றால் போட்டி எப்படி இருக்கும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, " யார் நமக்கு எதிர் வேட்பாளராக நிற்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நம்முடைய பணி என்னவாக இருக்கிறது என்பது தான் முக்கியம்" என சிரித்தவாறே பதிலளித்து சென்றார்