• vilasalnews@gmail.com

ஜான்பாண்டியன் கேட்கும் அந்த தொகுதி.. பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை

  • Share on

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன் பாஜக தலைவர்கள் இன்று தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 3 தொகுதிகளை குறிப்பிட்ட ஜான் பாண்டியன் அதில் ஒரு தொகுதி வேண்டும் என கூறியுள்ளார்.

பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் இன்று பாஜக தலைவர்கள் ஜான் பாண்டியனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் சென்னை சூளைமேட்டில் உள்ள ஜான் பாண்டியன் வீட்டுக்கு இன்று சென்று அவரை சந்தித்து தொகுதி பங்கீடு பற்றி பேசினர்.

அப்போது, ஜான் பாண்டியன் தென்மாவட்டத்தில் ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர் 3 முக்கிய தொகுதிகளை குறிப்பிட்டு அதில் ஒன்றை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி தென்காசி தனித்தொகுதியை ஒதுக்க வேண்டும் என ஜான் பாண்டியன் கேட்டுள்ளார். இல்லாவிட்டால் இரண்டாவதாக திருநெல்வேலியை (பொதுத்தொகுதி) ஒதுக்க வேண்டும். அதற்கும் மறுத்தால் ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதில் தென்காசி தனித்தொகுதியாகும். திருநெல்வேலி பொதுத்தொகுதி என்றாலும் கூட ஜான் பாண்டியனின் சொந்த தொகுதியாகும். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த ஜான் பாண்டியனின் நாடாளுமன்ற தொகுதி திருநெல்வேலியாகும். ராமநாதபுரம் தொகுதியில் ஜான் பாண்டியன் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகம் உள்ளன. இதனால் இந்த 3 தொகுதிகளில் ஒன்றை ஒதுக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை கேட்ட பாஜக தலைவர்கள் கட்சி தலைமையுடன் பேசி இறுதி முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

  • Share on

"திராவிட அரசியல்" ரொம்ப கவலையாக இருக்கு... இது மாறணும் - பிரசாந்த் கிஷோர் பரபரப்பு தகவல்!

தூத்துக்குடியில் நிர்மலா சீத்தாராமன் எதிர்த்து நின்றால்? கனிமொழி சொன்ன பதில்!

  • Share on