• vilasalnews@gmail.com

அதிமுகவை பாஜக முந்துதா? கருத்து கணிப்பு முடிவுகளால் கலக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி!

  • Share on

தமிழ்நாட்டில் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக மக்களவை தேர்தலில் உருவெடுக்கும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

மக்களவை தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. . தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

- பாஜக: 1

- திமுகவின் இந்தியா கூட்டணி - 36

- அதிமுக: 2

- மற்றவை: 0

திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதாவது இந்த முறை பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும். முதல்முறையாக பாஜகவின் வாக்கு வங்கி அதிமுகவை முந்தும். தமிழ்நாட்டில் பாஜக இரண்டாம் இடத்தை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இப்படி பல்வேறு கணிப்புகள் பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும் என்று கணித்து உள்ளன.

தமிழ்நாட்டை சேர்ந்த சில செய்தி நிறுவனங்கள் கூட பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக மாறும், அல்லது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு அடுத்தபடியாக வாக்கு சதவிகித அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சியாக மாறும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனால், எடப்பாடி பழனிச்சாமி மிகப்பெரிய அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலும் பாஜக - திமுக இடையே தான் போட்டி இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

  • Share on

திமுகவின் நம்பர் 1 கிரேடில் தூத்துக்குடி தொகுதி... முதல் முறையாக தூத்துக்குடி உள்ள வரும் பிரதமர் மோடியின் கணக்கு என்னவாக இருக்கும்?

புறக்கணிப்பு... சர்ச்சையிலும் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் - அமைச்சரை வசமாக வளைத்த அண்ணாமலை!

  • Share on