• vilasalnews@gmail.com

வாரிசுக்கு தொகுதி கேட்ட சீனியர் அமைச்சர்... அது துரை வைகோவிற்கு என "நோ" சொன்ன திமுக தலைமை!

  • Share on

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியானது  மார்ச் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தெரிகிறது.

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை முடித்து விட வேண்டுமென அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர் கட்சிகளும் அணிதிரண்டு அமைத்த இண்டியா கூட்டணி சிதறி வருவது ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்திலோ, "உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல்" என்ற பெயரில், திமுக படு பயங்கரமாக நாடாளுமன்றத் தேர்தலை பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள மூன்று குழுக்களை தனித்தனியே அமைத்து வேட்பாளர் தேர்வு தொடர்பான பணிகளை உதயநிதியிடம் திமுக தலைமை ஒப்படைத்துள்ளது.

கடந்த தேர்தலைப் போல் அல்லாமல் இந்த முறை 25 தொகுதிகளில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. மதிமுகவிற்கு இரண்டு தொகுதிகளும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி என மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியுள்ளது. ஆக மொத்தம் 28 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக தலைமை உறுதியாக உள்ளது.

கடந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நின்று வென்றவர் திருநாவுக்கரசர். இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்க கூடாது என திருச்சி உடன்பிறப்புகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளது. அதே நேரம் மூத்த அமைச்சர் கே.என் நேரு தனது மகன் அருணுக்கு திருச்சி தொகுதியை ஒதுக்க வேண்டும் என ஸ்டாலினிடம் கேட்க,  ஸ்டாலினோ "நோ" சொல்லிவிட்டாராம். அதேநேரம் மதிமுகவுக்கு திருச்சியை ஒதுக்கி துரை வைகோவை உதய சூரியன் சின்னத்தில் களம் இறக்க முடிவு செய்துள்ளதாம் திமுக தலைமை.


அதே வேளையில், கடந்த தேர்தலில் பாரிவேந்தர் திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாரிவேந்தர் தற்பொழுது பாஜக கூட்டணிக்கு சென்றுள்ளதால் இந்த தொகுதியையாவது தனது மகன் அருணுக்கு ஒதுக்க வேண்டும் என நேரு காய் நகர்த்தி வருகிறார்.

  • Share on

ரிசர்வ் தொகுதி என்றால் என்ன? அதற்கு விதை போட்டது யார்? தனித்தொகுதி என்பது தொடர வேண்டிய ஒன்றா?

திமுகவின் நம்பர் 1 கிரேடில் தூத்துக்குடி தொகுதி... முதல் முறையாக தூத்துக்குடி உள்ள வரும் பிரதமர் மோடியின் கணக்கு என்னவாக இருக்கும்?

  • Share on