• vilasalnews@gmail.com

செருப்பணிந்து பொங்கல் வைப்பான்; கையுறையணிந்து வேல்பிடிப்பான் அவன் யார்?

  • Share on

வெள்ளி வேலுடன் ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் வேளையில், கையில் வேலுடன் ஸ்டாலின் நிற்கும் புகைப்படங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக – அதிமுக கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவில் முதல்வர் பழனிசாமியே நேரடியாக பரப்புரையில் ஈடுபட்டு வர திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அம்மையார்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், “கிராமசபை கூட்டத்தில் 1.25 கோடி பேர் கலந்துகொண்டு, அதிமுகவை நிராகரிக்கிறோம் என கையொப்பமிட்டுள்ளனர்.


திமுக சார்பில் இதுவரை 22 ஆயிரம் கிராமசபை கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறோம் என்று பேசினார். அப்போது அங்கு வந்த வேத விற்பணர்கள், ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அத்துடன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுகவினர் ஸ்டாலினுக்கு வெள்ளி வேலை பரிசாக அளித்தனர்.


வெள்ளி வேலுடன் ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கையில் வேலுடன் ஸ்டாலின் நிற்கும் புகைப்படங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • Share on

சசிகலா என்ன சிங்கம்,புலி,கரடியா? அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய பாஜக மூத்த தலைவர்

ஸ்டாலின் வேலைப் பிடித்தாலும் கடவுளின் வரம் கிடைக்காது - முதலமைச்சர்

  • Share on