• vilasalnews@gmail.com

விஜயதாரணி எம்எல்ஏ காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைவாரா? மாட்டாரா?அவரே கொடுத்த விளக்கம் இது!

  • Share on

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைவதாக வெளியான தகவல்களுக்கு விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி விளக்கம் அளித்துள்ளார்.

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் அவர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார் என்ற தகவலும் வெளியானது.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதியில் தொடர்ந்து 3 ஆவது முறையாக எம்எல்ஏவாக இருப்பவர் விஜயதாரணி. இவர் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். தமிழக அரசியலை விட டெல்லி அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர் இவர்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் காலமானதையடுத்து, அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது அந்த தொகுதியில் விஜயதாரணி போட்டியிட காங்கிரஸில் வாய்ப்பு கேட்டதாக தெரிகிறது.

ஆனால், கட்சி தலைமை விஜயதாரணிக்கு வாய்ப்பு கொடுக்காமல் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு வாய்ப்பு கொடுத்தது. அவரும் வெற்றி பெற்றார். அதிலிருந்து விஜயதாரணிக்கு காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில், இந்த முறையும் எம்.பி சீட் விஜயதாரணிக்கு கிடைக்காது என சொல்லப்பட்டு வருவதால் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி முன்னிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைவார் என சொல்லப்பட்டு வரும் நிலையில், இன்று பாஜக தேசிய குழு கூட்டம் நடைபெறும் நிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைகிறார் என சொல்லப்பட்டது.

இதை மறுத்து விஜயதாரணி விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பாஜகவில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தற்போது பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

  • Share on

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி நிலவரம்... 8 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது!

ரிசர்வ் தொகுதி என்றால் என்ன? அதற்கு விதை போட்டது யார்? தனித்தொகுதி என்பது தொடர வேண்டிய ஒன்றா?

  • Share on