• vilasalnews@gmail.com

அதிமுகவிற்கு ஆதரவு.... நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கும் சந்தனப்பிரியா பசுபதி பாண்டியன்?

  • Share on

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியை, சந்தனப்பிரியா பசுபதி பாண்டியன் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது. யார் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார்கள் என்ற பேச்சு பரவலாக தமிழகத்தில் எழுந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் யார் சேருவார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதுபோல பாஜக கூட்டணியும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் மறைமுகமாக பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இப்படியான சூழலில், தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருதம் மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் சந்தனப்பிரியா பசுபதி பாண்டியன், சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமியை நேரில் சந்தித்து, வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக விற்கு தனது ஆதரத்தை தெரிவித்ததோடு, அதிமுகவின் கூட்டணி கட்சி வெற்றிகளுக்கு 40 தொகுதிகளிலும் எங்களது பங்களிப்பு இருக்கும் என உறுதியளித்துள்ளாராம்.


இந்த சந்திப்பின் போது விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் நடராஜன், வழக்கறிஞர் ராஜகுரு, ரமேஷ் பாண்டியன், தமிழரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த திடீர் சந்திப்பு, ஆதரவு குறித்து அரசியல் வட்டாரங்களில் விசாரிக்கையில், தேவேந்திர குல சமூக வாக்குகளை பெறுவதற்காக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், கிருஷ்ணசாமி பாஜக பக்கம் சாய்வதால், தென்மாவட்டங்களில் கணிசமாக உள்ள தேவேந்திர குல சமூக மக்களின் வாக்குகளை அதிமுக பக்கம் அள்ளி எடுப்பதற்காக, அதிமுக கூட்டணியில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருதம் மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளருமான சந்தனப்பிரியா பசுபதி பாண்டியனை சேர்க்கும் வேலையை கச்சிதமாக முடித்து இருக்கிறார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே ராஜேந்திர பாலாஜி - சந்தனப்பிரியா பசுபதி பாண்டியன் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்பட்ட நிலையில், இன்று அது அதிமுக கூட்டணிக்கான பேச்சுவார்த்தை என தெளிவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. 

மேலும், கிருஷ்ண சாமி தங்களை விட்டு போனாலும் அவ்விடத்தை நிரப்ப எங்களுக்கு ஆள் இருக்கிறது. அவர் தான் சந்தனப்பிரியா பசுபதி பாண்டியன் என்று மட்டும் சொல்லாமல், தென்காசி எம்பி தொகுதியில் அதிமுக சார்பில் சந்தனப்பிரியா பசுபதி பாண்டியனை வேட்பாளராக களம் இறக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் விவரம் அறிந்தவர் சொல்கிறார்கள்.

  • Share on

தேர்தலில் அதிபர் ஜோ பைடனுடன் கூட்டணி...அதிர்வை கிளப்பிய சீமான்!

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் விஜயகாந்த் வாரிசு? விஜய பிரபாகரன் களமிறங்கும் தொகுதி எது? பிரேமலதா விளக்கம்

  • Share on