மனித தன்மையற்ற முறையில், காட்டு யானையை கொன்ற கொடூர மனம் படைத்த மனித மிருகங்களை, விரைந்து தண்டிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு ஊராட்சியில், திமுகவின் மக்கள் கிராம சபை நிகழ்ச்சி நடைபெற்றது. திண்ணை பிரச்சாரங்கள் மூலம், தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்த திமுகவின் வெற்றி, மக்கள் கிராம சபை கூட்டங்கள் மூலம் தொடர்ந்து கொண்டிருப்பதாக, மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில், திமுகவின் வெற்றிக்கு, மக்கள் கிராம சபை கூட்டங்கள் பேருதவி புரிந்ததாக, மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மனித தன்மையற்ற முறையில், காட்டு யானையை கொன்ற கொடூர மனம் படைத்த மனித மிருகங்களை, விரைந்து தண்டிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும், நேரில் சென்று, தேர்தல் பரப்புரையில் ஈடுபட போவதாகவும், அதற்கான பயணத் திட்டம் குறித்து, வருகிற 25ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.