• vilasalnews@gmail.com

சென்னையில் ஒருபக்கம்.. சேலத்தில் இன்னொருபக்கம்.. ஒரே நாளில் பாஜகவை சம்பவம் செய்த திமுக அதிமுக!

  • Share on

சென்னை கொளத்தூர் தொகுதி மத்திய மண்டல பாஜகவினர் கொளத்தூர் பகுதி தலைவர் நந்தகோபால் தலைமையில் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மொத்தமாக திமுகவில் இணைந்தனர். இதேபோல் கிருஷ்ணகிரியில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்பட எல்லா கட்சிகளுமே கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுறுசுறுப்பாக உள்ளன. தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, கொங்கு மக்கள் தேசிய கட்சி, முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அப்படியே தொடர்கின்றன

அதேநேரம் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சியை தவிர எந்த கட்சிகளும் கூட்டணியில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அதிமுக கூட்டடணியில் முன்பு இருந்த தேமுதிக, பாமக, புதிய தமிகம் போன்றவை தற்போது எந்த பக்கம் வேண்டுமானும் போகலாம்.

பாஜக கூட்டணியை பொறுத்தவரை ஜிகே வாசன், டிடிவி தினகரன், அதிமுக ஒபிஎஸ் அணி, சசிகலா உள்ளிட்டோர் பாஜக உடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இதில் தேமுதிக, பாமக இரண்டையுமே பாஜக தனது கூட்டணியில் சேர்க்க தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அதிமுகவும் கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த களோபரங்களுக்கு நடுவே பாஜகவினர் சிலர் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொளத்தூர் தொகுதி மத்திய மண்டல பாஜகவினர் கொளத்தூர் பகுதி தலைவர் நந்தகோபால் தலைமையில் பாஜகவில்  இருந்து விலகியதுடன் அமைச்சர் சேகர்பாபு இன்று சந்தித்து தங்களை திமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அதே போல, பா.ஜ.க. எஸ்.டி. பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணகிரி பாப்பண்ணா தனது ஆதரவாளர்களுடன், கே.பி.முனுசாமி அழைப்பின் பேரில் சேலத்திற்கு சென்ற அவர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இதனையடுத்து, சென்னையில் ஒருபக்கமும், சேலத்தில் இன்னொருபக்கம் என ஒரே நாளில் பாஜகவை திமுக அதிமுக சேர்ந்து சம்பவம் செய்துள்ளதாக அந்த இரு கட்சியினர் கூறிக்கொள்கின்றனர்.

  • Share on

"இந்தியா" கூட்டணி சலசலப்பு - எடப்பாடி பழனிசாமி கருத்தால் தேசிய அளவில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் மத சிறுபான்மை கிறித்தவ மக்கள் வாக்குகள் யாருக்கு?

  • Share on