பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் ஆவார் என்பது இலவு காத்த கிளி கதைதான். தமிழகத்தை பொறுத்த வரை 2026ல் பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி கட்டாயம் வரும். இது எழுதப்படாத விதி.
குருமூர்த்தி, ரஜினி போன்ற யார் சொன்னாலும் அண்ணாமலை முதல்வர் ஆவது என்பது நடக்காத விஷயம். இரட்டை இலை துளித்து பசுமையாக உள்ளது என துள்ளி குதித்து ஆருடம் சொல்லியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
ஜெயலலிதா முதல் பதவியில் நீடிக்க தகுதி இல்லாதவர் என நீதிமன்றம் அறிவிப்பது வரை தேனி டீக்கடை காரர் பன்னீர்செல்வம் தான் முதல்வராக ஆகுவோம் என்று பகல் கனவாவது கண்டிருப்பாரா? அதே பன்னீர் செல்வத்திடம் முதல்வர் மகுடம் இருக்கும் போது, அவருக்கு பவ்யமாக கும்பிடு போட்டுக் கொண்டிருந்த பழனிச்சாமிக்கு முதல்வர் மகுடம் மாறும் என்று அவரும் தான் எண்ணியிருப்பாரா? அதுபோல அண்ணாமலை முதல்வராக வேண்டுமா வேண்டாமா என்பது தமிழக மக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.
இதை ஜெயக்குமாரோ, பன்னீர்செல்வவோ, பழனிச்சாமியோ, அல்ல. அண்ணாமலை முதல்வராவது காலம் தீர்மானிக்க வேண்டிய விஷயமே அன்றி திராவிட மாடல் கழகங்களோ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ அல்ல என்று பதிலடி கொடுக்கின்றனர் பாஜகவினர்.