• vilasalnews@gmail.com

சிறையில் இருக்கும் நிலையில்...திமுக இளைஞரணி மாநாட்டில் செந்தில் பாலாஜி!

  • Share on

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாக அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாடுக்கு தனது பெயரில் முழு பக்க விளம்பரம் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் ஒரு பக்கம் தாம் சிறையில் இருந்தாலும் மற்றொரு பக்கம் கரூர் மாவட்டத்தில் நடக்க வேண்டிய கட்சிப் பணிகள் சுணக்கமின்றி நடைபெற்று வருவதை உணர்த்தியுள்ளார். தனது பெயருக்கு கீழ் தமிழ்நாடு அமைச்சர், கரூர் மாவட்ட திமுக செயலாளர் என்ற பொறுப்புகளையும் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடு நாளை நடைபெறுவதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் திடல் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல 10 லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா, தயிர் சாதம், ஸ்வீட், காலி பிளவர் சில்லி என ஏராளமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் சேலம் புறநகர் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் திமுக இளைஞரணி மாநாட்டை வாழ்த்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் நாளிதழ்களில் முழு பக்கம் விளமபரங்கள் கொடுத்துள்ளனர். அந்த வகையில் அமைச்சர் செந்தில்பாலாஜியும் முரசொலி நாளிதழில் தனது பெயரில் முழு பக்க விளம்பரம் கொடுத்துள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 10 முறைக்கு மேல் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 14ஆம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி 6 மாதங்களுக்கு மேலாக விசாரணைக் கைதியாக இருந்து வருகிறார்.

  • Share on

எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க கனிமொழி.. திமுகவினர் பேசாத பேச்சா?

கோபாலபுரத்தில் அண்ணாமலை... 2024-ல் பாஜக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் அழிவு ஆரம்பமாகும்!

  • Share on