அயோத்தியில் கோவிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதியே கட்டப்பட்டது எனக் கூறிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார். மேலும் சனாதன தர்மத்தின் ஒரு பகுதிதான் ஜல்லிக்கட்டு எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22-ந் தேதி நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு, ராமர் கோவில் திறப்பு விழாவை அரசியலாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி புறக்கணித்துள்ளன.
சென்னையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
அயோத்தி ராமர் கோயில் திறப்பதற்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு கோவில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், அயோத்தியில் கோவிலை இடித்துவிட்டுதானே பாபர் மசூதியே கட்டப்பட்டது. உண்மையான சமத்துவத்தை நிலைநாட்ட அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் திமுகவினரும் பங்கேற்க வேண்டும் என்றார்.
மேலும் ஜல்லிக்கட்டு என்பது சனாதன தர்மத்தின் ஒரு பகுதிதான். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை கோவிலில் இருந்து பிரிக்க முடியாது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சனாதன திருநாள் என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டதை வரவேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்திருந்தார். அதாவது "சங்க கால தமிழ் இலக்கியமான கலித்தொகையில் ஏறு தழுவுதலில் பங்கேற்கும் காளைகள் சிவன், முருகன், பலராமன், கிருஷ்ணன் ஆகிய தெய்வங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. அந்த கால மக்களின் வாழ்க்கையை இன்று வேறுவிதமாக காட்டுவது தீய உள்நோக்கம் மற்றும் பிரிவினைவாத நோக்கம் கொண்டது" என குறிப்பிட்டிருந்தார் நிர்மலா சீதாராமன்.
இதற்கு சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சு.வெங்கடேசன் எம்பி தமது எக்ஸ் பக்கத்தில், ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம். "தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்" என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். உலகம் அதிர உரக்கச்சொல்வோம்...கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை "தமிழும் திமிலும்" எமது பேரடையாளம் என பதில் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில், தமிழனத்தின் அடையாளத்தில் ஒன்றொடு ஒன்று கலந்தது இந்து மதம். ஆனால், அதை திராவிடம் எனும் பெரியரில் சிலர் இங்கே தமிழ் - இந்து வரலாறை அழிக்கவும் மாற்றவும் முயற்சிக்கிறார்கள். அது இனி நடக்காது என வரிசை கட்ட தொடங்கி விட்டனர் பாஜகவினர்.
எனவே திருவள்ளுவர் காவிய தலைவனாக காட்டத்தொடங்கி, ஜல்லிக்கட்டு சனாதனத்தின் அடையாளம் என கூறத்தொடங்கியது வரை தமிழகத்தில் திமுக - பாஜக இடையேயான மல்லுக்கட்டு