• vilasalnews@gmail.com

திமுக கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தது அல்ல, ஒருமித்த எண்ணங்களின் அடிப்படையில் அமைந்தது - ஸ்டாலின்

  • Share on

திமுக கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தது அல்ல, ஒருமித்த எண்ணங்களின் அடிப்படையில் அமைந்தது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று தேனி மாவட்டம் போடி தொகுதி கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். 

அப்பொழுது அவர் பேசியதாவது:-

கூட்டணி கட்சிகளை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிர்பந்திக்கவில்லை. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கிறோம் என்பது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சதி. திமுக கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தது அல்ல, ஒருமித்த எண்ணங்களின் அடிப்படையில் அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

  • Share on

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம் என்பதை விசாரிப்போம் - மு.க.ஸ்டாலின் உறுதி

அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார்? - முதலமைச்சர் பழனிசாமி

  • Share on