• vilasalnews@gmail.com

தீஷ்ரி பார் மோடி சர்க்கார்... முடிவானது தேர்தல் கோஷம்!

  • Share on

இந்தியாவில் 18வது மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. நடப்பு 17வது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். எப்படியும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு மார்ச் மாத இறுதியில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 272 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆகியவை பிரதான போட்டியில் இறங்கியுள்ளன. இதுதவிர வாக்குகளை பிரிக்கும் வகையில் சில பிராந்திய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி என மூன்று கூட்டணிகள் பிரதான போட்டியில் இருக்கின்றன. தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக வரும் நாடாளுமன்ற தேர்தாலுக்குண்டான பிரதான கோஷத்தை பாஜக தலைமை முடிவு செய்து விட்டது. பல்வேறு தரப்பிலிருந்து வந்த பல கோஷங்களை பரிசீலித்துவிட்டு, இறுதியாக 'தீஷ்ரி பார் மோடி சர்க்கார், அப் கி பார் 400 ' என்ற கோஷத்தை பாஜக மேலிடம் தேர்வு செய்துள்ளது.

'மூன்றாவது முறையும் மோடி அரசு, இந்த முறை 400 இடங்களை தாண்டுவோம்' என்பதே இதன் பொருள்.

  • Share on

அண்ணாமலையின் அடுத்த டார்கெட் இந்த அமைச்சரா?

விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர்னு சொல்லக் கூடாது... ஜெயலலிதா போட்ட முதல் கண்டிஷன் - உண்மையை உடைத்த பண்ருட்டி!

  • Share on