• vilasalnews@gmail.com

50 ஆண்டு கால வழக்கம் நிறுத்தும்... திடீர் முடிவெடுத்த வைகோ!

  • Share on

கடந்த ஐம்பது ஆண்டுகளாக கலிங்கப்பட்டியில் நான் நடத்தி வரும் தமிழர் திருநாள் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் இவ்வாண்டு நடைபெறாது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிச்சாங் புயலாலும், மித மிஞ்சிய பெருமழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டப் பகுதிகளும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளன.

பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்ற போதிலும் நிலைமை முழுமையாக சீரடைய இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகக்கூடும்.

இயற்கைச் சீற்றத்தால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்ற நிலையில், தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரணத் தொகையை தாராள மனதுடன் வழங்கிட மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

இத்தகைய சூழ்நிலையில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக கலிங்கப்பட்டியில் நான் நடத்தி வரும் தமிழர் திருநாள் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் இவ்வாண்டு நடைபெறாது என்பதைத் தெரிவித்து கொள்கிறேன்.

  • Share on

பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது போலவே செய்துள்ளாரா முதல்வர் ஸ்டாலின்?

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்?

  • Share on